26 August 2013

உச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல்

உச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல்



சென்னை : 

             உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்கு ஒரு நாள் உள்ள நிலையில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை திருத்தி தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. இது சென்னை நகரில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

  • குறைந்தபட்ச கட்டணம் 1.8 கி.மீ.க்கு 25 ரூபாய்; 
  •  
  • ஒவ்வொரு கி.மீ. தூரத்துக்கும் 12 ரூபாய்,
  •  
  • புதிய டிஜிட்டல் மீட்டர் கருவி இலவசமாக அளிக்கப்படும்,
  •  
  • கம்ப்யூட்டர் ரசீது தரப்படும்,
  •  
  • பிரச்னை செய்தால், அவசர உதவிக்கு ஆட்டோவில் அபாய பட்டன்,
  •  
  • கட்டணத்தை அதிகம் வாங்கும் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் 

என்றும் அரசு அறிவித்துள்ளது.

  சென்னை மாநகரத்துக்கான கட்டணங்களை அறிவித்துள்ள தமிழக அரசு, மற்ற மாவட்டங்களில் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு கட்டண விகித பட்டியல் வழங்கப்படும் என்று கூறியுள்ளது இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. சென்னையில் 71,470 ஆட்டோக்கள்
இயங்குகின்றன. 

ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டணம் 2007ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. எரிபொருள் விலை, உதிரி பாகங்கள் விலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சம்பளம் ஆகியவை உயர்ந்ததால், தற்போதுள்ள கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள், கோரிக்கை விடுத்தன.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், அலுவல் குழு அமைக்கப்பட்டது. ஆட்டோ கட்டணம் தொடர்பாக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உரிய முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி  முன்னிலையில், அரசு அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்க பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு முத்தரப்புக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆட்டோ கட்டணங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, 22ம் தேதியன்று எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், செந்தில்பாலாஜி, தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், உள் துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, சட்டத் துறைச் செயலாளர் ஜெயச்சந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் தமிழக அரசின் தலைமை வக்கீல் சோமயாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நடந்த விரிவான விவாதத்துக்குப் பிறகு, பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள்,ஆட்டோ உரிமை யாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் பயனடையும் வகையில் புதிய கட்டண விகிதம் அமல்படுத்தப் படுகிறது.

0 Responses to “உச்ச நீதிமன்றம் கெடு எதிரொலி புதிய ஆட்டோ கட்டணம் அமல்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT