14 May 2013

ஆட்டோ சங்கர் - வரலாறு 5 ( ஆட்டோ சங்கருக்கு தூக்கு தண்டனை )

காதல் மனைவி லலிதா உள்பட 6 பேர்களை படுகொலை செய்த வழக்கில், ஆட்டோ சங்கருக்கு தூக்கு தண்டனை 



6 பேர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, ஆட்டோ சங்கர் உள்பட 10 பேர் மீது சைதாப்பேட்டை 2_வது ஜ×டிசியல் மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் 26_12_1988 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த குற்றப்பத்திரிகை 1,100 பக்கம் கொண்டதாக இருந்தது. ஆட்டோ சங்கர் உள்பட 10 பேர் மீதும் இ.பி.கோ. 320 பி (சதி செய்தல்), 147 (கூட்டமாக சேர்ந்து கல வரம் செய்தல்), 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல்), 364 (கொலை செய்வதற்கு ஆட்களை கடத்துதல்), 302 (கொலை), 201 (கொலைகளுக்கான சாட்சியங்களை மறைத்தல்) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

28_10_1987 அன்று சுடலைவும், 8_1_1988 அன்று லலிதாவையும், 15_3_1988 அன்று ரவியும், 29_5_1988 அன்று சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகியோரும் கொலை செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் இந்த வழக்கு செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி மோகன்தாஸ் வழக்கை விசா ரித்தார். முதலாவதாக அப்ரூவர் பாபு சாட்சியம் அளித்தார். அதைத்தொடர்ந்து 9 மாஜிஸ்திரேட்டுகள், 5 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் உள்பட மொத்தம் 134 பேர் சாட்சியம் அளித்தனர்.

சினிமா நடிகை புவனி மற்றும் விபசார அழகிகள் அனிதா, கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர். அரசு தரப்பில் வக்கீல்கள் கம்பம் சுப்பிரமணியம், எஸ். கோபாலகிருஷ்ணன், பால்ராஜ் ஆகியோர் வாதாடினார்கள். ஆட்டோ சங்கர் தரப்பில் வக்கீல் நடராஜன், அவருக்கு உதவியாக கணேஷ், மனோகர் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இந்த வழக்கில் 31_5_1991 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக இருந்ததால் அவர்கள் மீதான வழக்கு விசாரணை தனியாகப் பிரித்து நடைபெற்றது. எனவே, ஆட்டோ சங்கர் உள் பட 8 பேரும் கை விலங்கு மாட்டி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

தீர்ப்பு கூறும் முன் அவர்களிடம் நீதிபதி, "உங்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. நீங்கள் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு ஆட்டோ சங்கர், "நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று பதில் அளித்தான். மற்றவர்களும் அதையே கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரிடமும் "நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று எழுதப்பட்டிருந்த ஒரு வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. 10_49 மணிக்கு நீதிபதி எழுந்து அவரது அறைக்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குற்றவாளிகளின் அங்க அடையாளங்களை கோர்ட்டு ஊழியர்கள் சரிபார்த்து குறித்துக்கொண்டனர்.

பகல் 11_45 மணிக்கு நீதிபதி மீண்டும் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தார். ஒரே நிமிடத்தில் அதாவது 11_46 மணிக்கு தனது தீர்ப்பை கூறிவிட்டு உடனடியாக அவரது அறைக்கு சென்றுவிட்டார். "ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிக்கிறேன். இவர்களை அழைத்துக்கொண்டு போகலாம்" என்று மட்டுமே நீதிபதி கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் மீண்டும் கைகளில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆட்டோ சங்கர் கோர்ட்டுக்கு வரும்போது சிரித்தபடியே வந்தான். பத்திரிகை நிருபர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவித்துக்கொண்டான். போட்டோ கிராபர்களுக்கு சிரித்தபடியே போஸ் கொடுத்தான்.

கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டபின் ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளை பார்த்து சிரித்துக்கொண்டான். அவனது முகத்தில் எந்தவித கவலையும் தெரியவில்லை. ஆட்டோ சங்கரின் தாய் ஜெயலட்சுமி கோர்ட்டுக்கு வந்திருந்தார். நீலநிற தோல் பையை தோளில் தொங்க விட்டிருந்த அவள் ஆட்டோ சங்கரைப் பார்த்து கண்ணீர் விட்டார். வேனில் ஏறி ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்ட போது, ஆட்டோ சங்கர் தனது தாயைப் பார்த்து கை அசைத்தபடியே சென்றான். நீதிபதி தமது தீர்ப்பை 238 பக்கங்களில் எழுதியிருந்தார். தீர்ப்பின் முக்கிய பகுதிகள் வருமாறு:-

"எதிரிகள் 8 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன.

இம்மாதிரி கொலைகளை செய்தவர்களுக்கு தக்கபடி தண் டனை அளித்தால்தான் நீதியின் நலன் விளங்கும். இல்லை யேல் அக்கிரமங்கள் ஆனந்த கூத்தாடும். அநியாயங்கள் தலைவிரித்தாடும். இப்படியே சென்றால் நாடு நாடாக இருக்காது. நாடு காடாகிவிடும்.

அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்காவிட்டால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், காவல் துறையின் மீதும் நம்பிக்கையே இல்லாமல் போய்விடும்.

நாடு அமைதியான சூழ்நிலையில் இருக்கவேண்டுமானால் இம்மாதிரியான கொலை செய்தவர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும்.

அவ்வாறு தக்க தண்டனை அளித்தால்தான் இது மற்றவர் களுக்கு பாடமாக அமையும். இந்த எதிரிகளின் கொலையை பார்க்கும்போது தனக்கு எதிராக இருக்கும் நபர்களை அடியோடு அதாவது வேரோடு அழித்து அவர்களை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

சட்டத்தை தன் கையிலேயே எடுத்துக்கொண்டு "சட்டம் என் கையில்" என்று இவர்களே ஒரு தனி கூட்டமைப்பு அமைத்து அவர்களுக்கு எதிரானவர்களை பழி வாங்கி இருக்கும் கொலையை பார்க்கும்போது அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அளிப்பதுதான் நீதியின் நலனுக்கு உகந்தது.

அவ்வாறு தண்டனை அளித்தால்தான் நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகும். அனைவரும் அமைதியுடன் வாழ வழி ஏற்படும்.

எனவே, நீதியின் நலன் கருதியும், வழக்கின் தன்மையை கருதியும் சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அளிக்கிறேன்.எதிரிகள் ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவம் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்.

எதிரிகள் சங்கர், எல்டின், சிவாஜி மூவரும் சாகும் வரை தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும். இவர்களுக்கு அளிக் கப்பட்டுள்ள மரணதண்டனை சென்னை உயர்நீதிமன்றத்தினரால் உறுதி செய்யப்படவேண்டும். 30 நாட்களுக்குள் மேல் முறையீடு (அப்பீல்) செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.

தண்டனை பெற்ற 8 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் கொண்டு செல்லப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

0 Responses to “ஆட்டோ சங்கர் - வரலாறு 5 ( ஆட்டோ சங்கருக்கு தூக்கு தண்டனை )”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT